நடிகை சாய் பல்லவி திருமண நிகழ்வில் நடனமாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் வணிக வெற்றியைப் பெற்றதால் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக சாய் பல்லவி மாறியுள்ளார்.
தற்போது, ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி இயக்குநர்களும் சாய் பல்லவிக்கு கதை கூறி வருகின்றனர். விரைவில், கதை நாயகியாக அவர் அறிமுகமாவார் என்றும் தெரிகிறது.
இதையும் படிக்க: ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்ற குடும்பஸ்தன்!
அதேநேரம், என்னதான் மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி தன் குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளவும் செய்கிறார்.
அப்படி, ஊட்டி கோத்தகிரியில் நடைபெற்ற தன் உறவினர் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட சாய் பல்லவி, அங்கு உறவினர்களுடன் படுகர் நடனமாடி பலரையும் ஈர்த்துள்ளார்.
நீலநிற சேலையில் சாய் பல்லவி நடனமாடிய அந்த விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.