ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

பேபி & பேபி படத்தின் ஓடிடி தேதி!

பேபி & பேபி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

Updated On :

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பேபி & பேபி. திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேபி & பேபி.

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் இப்படத்தில் யோகி பாபு, கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில், பேபி & பேபி படம் மார்ச் 21 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.