
சின்ன திரையில் நடிகை சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ள புதிய நிகழ்ச்சியில் அவருடன் பிரபல தொகுப்பாளரும் இணையவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் சின்ன திரை தொடர்கள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன். அதிக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்திவரும் சன் தொலைக்காட்சி, குழந்தைகளை மையப்படுத்திய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வாடிக்கையானது.
குட்டி சுட்டீஸ், சன் சிங்கர்ஸ் என குழந்தைகளுக்கான பல நிகழ்ச்சிகளைக் கொடுத்த சன் தொலைக்காட்சியில், நானும் ரெளடிதான் என்ற குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகை சிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளார். இது குறித்த முன்னோட்ட விடியோவும் சமீப்த்தில் வெளியானது.
தனது வசீகரமான தோற்றத்தாலும் குழந்தைத்தனமான செயல்களாலும் மக்களைக் கவர்ந்த சிவாங்கி, இந்த நிகழ்ச்சிக்கு பொருத்தமான நெறியாளர் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட சிவாங்கி, திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வருகிறார்.
தனிப்பாடல்களையும் பாடிவரும் அவர், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் நடிகையாகவும் மாறினார்.
அதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகையாக மாறி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
வெறும் பாடகியாக மட்டுமல்லாமல், மக்களை பொழுதுபோக்கிற்குள்ளாக்கும் கலைஞராகவும் மாற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட சிவாங்கி, தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நானும் ரெளடிதான் நிகழ்ச்சியை சிவாங்கியுடன் நடிகர் அஸ்வத்தும் தொகுத்து வழங்கவுள்ளார். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா உள்பட பல்வேறு பிரபல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர் இவர்.
தற்போது இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதால், நானும் ரெளடிதான் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.