அப்பா இறந்தபோது... ரசிகர்களால் வேதனையடைந்த பிருத்விராஜ்!

பிரபலங்கள் மறைவு குறித்து பிருத்விராஜ்...
அப்பா இறந்தபோது... ரசிகர்களால் வேதனையடைந்த பிருத்விராஜ்!
Published on
Updated on
1 min read

நடிகர் பிருத்விராஜ் பிரபலங்கள் மறைவுகளில் ரசிகர்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதில் நாயகனாக மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரங்களில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் புரமோஷன்களுக்காக படக்குழுவினர் நேர்காணல்களில் பேசி வருகின்றனர்.

அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசிய பிருத்விராஜிடம், ‘உங்கள் அப்பா இறந்தபோது அந்த இறுதிச்சடங்கில் மிக பொறுப்பாக இருந்தீர்கள் என்றார்கள், அந்த சிறுவயதிலேயே அந்த பொறுப்புணர்வு எப்படி வந்தது?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பிருத்விராஜ், “என் குழந்தைப்பருவம் மிக இனிமையானதாக இருந்தது. எந்த நெருக்கடிகளும் இல்லாமல் வளர்ந்தேன். அப்பா இறப்பில் அப்படி பொறுப்பாக இருந்தேனே எனத் தெரியவில்லை. ஆனால், பிரபலங்கள் மறைந்தால் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு உடலை வைப்பதை நான் வெறுக்கிறேன். அது எனக்கு பிடிக்காத ஒன்று. காரணம், என் அப்பா மறைந்ததும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த பல பிரபலங்கள் வந்தனர்.

முக்கியமாக, நடிகர் மோகன்லால் வந்தபோது ரசிகர்கள் அவர் பெயரைச் சொல்லி உற்சாகமடைந்தனர். ஆனால், இறந்துகிடந்தது என் அப்பா என்பதால் எனக்கு வேதனையாக இருந்தது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு மிக கஷ்டமான சூழல் அது. இப்போதும், அதை என்னால் மறக்க முடியவில்லை.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com