சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் 2-வது பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் ’கனிமா’ என்ற பெயரில் 2-வது பாடல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடல் நாளை வெளியாகவுள்ளது.
இந்தப் படம் வருகிற மே 1 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.