
ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலான ‘கனிமா’ இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்தப் படம் வருகிற மே 1 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ’கனிமா’ என்ற இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.
முன்னதாக, எக்ஸ் தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டதற்காக கனிமா பாடலுக்கு ’விசேஷ’ நடனம் ஒன்றை ஆடி விடியோ வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.