இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த இதயம் தொடர் நிறைவு பெற்றது.
இதயம் தொடர்...
இதயம் தொடர்...இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த இதயம் தொடர் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நாயகியை மாற்றியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முதல் பாகத்தில் நடித்த ஜனனி அசோக் குமாருக்கு மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரை விட்டு வேறு நடிகையை நடிக்க வைப்பது அந்தத் தொடரின் மீதான நன்மதிப்பை கெடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஜனனி அசோக் குமார் நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் ரிச்சர்ட் ஜோஷ் நாயகனாகவும் நடிக்கிறார்.

காதல், மகளின் மீதான பெற்றோரின் பாசம், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெறும் தொடராக இதயம் உள்ளது.

முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பால், இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், இத்தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஜனனி அறிவித்திருந்தார்.

இதனால் இரண்டாம் பாகத்தில் ஜனனி இருக்கமாட்டாரோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதன்படி இரண்டாம் பாகத்தில் ஜனனிக்கு பதிலாக வேறு நடிகையை நடிக்க வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே இதயம் முதல் பாகம் 640 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றுள்ளது. தனது வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பினாலும் பாரதி என்ற பாத்திரத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ஜனனி, இரண்டாம் பாகத்தில் இல்லையென்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பாரதி என்ற பாத்திரம் மக்கள் மனதில் பதிந்ததற்கு ஜனனியின் நடிப்பு மட்டுமே காரணம் என்றும், அப்பெயரிலோ அல்லது அவருக்கு பதிலாக வேறு பாத்திரத்தில் நாயகியை அறிமுகம் செய்தாலோ அது ஜனனி அளவுக்கு ரசிகர்களைக் கவர்வது கடினம் என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | எதிர்நீச்சல் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்த 4 நடிகர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com