800 நாள்களை நிறைவு செய்த ஆனந்த ராகம்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது.
ஆனந்த ராகம்
ஆனந்த ராகம்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது.

ஆனந்த ராகம் தொடரின் ஈர்ப்பு மிகுந்த கதை மற்றும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முதன்மை டிஆர்பி பெறும் தொடர்களில் ஒன்றாக உள்ளதால் ஆனந்த ராகம் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.

படித்த புத்திசாலித்தனம் மற்றும் தைரியம் நிறைந்த ஏழைப் பெண், படிக்காத பணக்கார இளைஞனை திருமணம் செய்துகொண்டு வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளும், பணக்கார குடும்பத்திற்கு வரும் சிக்கல்களை தீர்ப்பதிலும் பெண்ணாக இருந்து முக்கியத்துவம் பெறும் பாத்திரத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நாயகியின் செயல்களால் நாயகன் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படுகின்றன. கதையில் நாயகிக்கு அடிக்கடி சண்டைக் காட்சிகளும் இடபெறுகின்றன. இது பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

கதை மட்டுமின்றி தொடரில் நடிப்பவர்களுடைய நடிப்பும் பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், ஆனந்த ராகம் தொடருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

இத்தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி துணைப் பாத்திரங்களும் தொடரின் வெற்றிக்கு இன்றியமையாததாக உள்ளன.

பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார், வைஷாலி தணிகா, அஞ்சலி, வரதராஜன், ஜெயக்குமார், சிவரஞ்சினி விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடர், தற்போது 800 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி சிறப்பு போஸ்டரையும் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த எபிஸோடுகளில் மேலும் பல திருப்பங்களையும் அதிரடி காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | திருமண பந்தத்தில் இணைந்த சுந்தரி தொடர் நடிகர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com