
சுந்தரி சீரியல் நடிகை பாப்ரி கோஷ் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மாடலிங் துறையில் நுழைந்த பாப்ரி கோஷ், தற்போது சின்ன திரையில் பல தொடர்களில் நடித்து வந்தாலும் ஓய்வு நேரங்களை உடற் பயிற்சி நிலையத்திலேயே செலவிட்டு வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடரில் நாயகியாக நடித்தவர் நடிகை பாப்ரி கோஷ். கொல்கத்தாவில் பிறந்த இவர், பெங்காலி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பைரவா, சர்கார், விஸ்வாசம் உள்ளிட்ட 10 படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சித்தி -2, பூவே உனக்காக, அருவி, கண்ணெதிரே தோன்றினால், நாயகி, பாண்டவர் இல்லம், சுந்தரி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது, கலைஞர் தொலைக்காட்சியில் கௌரி எனும் சீரியலில் நடிக்கிறார்.
இந்நிலையில், பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். அதில் ”உங்களுடன் வேலை செய்தது மிகவும் சிறந்தது சார்” எனக் கூறியுள்ளார்.
பராசக்தி படத்தினை 2026 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என அதன் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.