பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் நடிகை, பட வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி பயன்படுத்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து...
சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து...இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்துவரும் பாக்யஸ்ரீ என்ற பாக்கியலட்சுமி, பட வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்ததாகவும், அதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், உடல் பருமனுக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் இதற்கு முன்பு கல்யாண பரிசு, கைராசி குடும்பம், அபூர்வ ராகங்கள், அழகு, நீலகுயில் உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.

1982ஆம் ஆண்டு தேவியின் திருவிளையாடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நியாயம் கேட்கிறேன், நலமறிய ஆவல், சாந்தி முகூர்த்தம், செயின் ஜெயபால், வளையல் சத்தம், ஒரே ரத்தம், தாயா தாரமா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதேபோன்று ஆஸ்ரம் என்ற படம் மூலமாக மலையாளத்திலும் அறிமுகமான பாக்ய ஸ்ரீ, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

60க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த அவர், வாசுதேவன் மன்னடியாரை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்தார்.

பின்னர் சின்ன திரையில் நடிக்கத் தொடங்கினார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் பார்வதி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியின் லட்சுமி தொடரிலும் நடித்து வருகிறார்.

பாக்ய ஸ்ரீ
பாக்ய ஸ்ரீஇன்ஸ்டாகிராம்

இதனிடையே தனது சினிமா அனுபவம் குறித்து பாக்ய ஸ்ரீ பேசிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

அதில், தனது கணவர் இறந்த 3 மாதத்திற்கு பிறகு சிறகடிக்க ஆசை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக உருக்கம் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும், படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பம்போல தன்னை கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமின்றி நடிக்க வந்த ஆரம்பக்கட்டத்தில் சினிமா வாய்ப்புகளுக்காக ஹார்மோன் ஊசி பயன்படுத்தியதையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

சிறகடிக்க ஆசை தொடரில் பாக்ய ஸ்ரீ
சிறகடிக்க ஆசை தொடரில் பாக்ய ஸ்ரீஇன்ஸ்டாகிராம்

அந்தக் காலகட்டத்தில் நடிகைகள் ஒல்லியான தேகத்தில் இருக்கக் கூடாது என்றும், தான் ஒல்லியாக இருந்ததால் பல பட வாய்ப்புகள் தவறவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் பின்விளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல், ஊசி போட்டுக்கொண்டதாகவும், ஆனால் தற்போது உடல் எடை கூடுதலாக இருப்பதாகவும், அதனை குறைக்க முடியாமல் அவதியுறுவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சிறகடிக்க ஆசை தொடருக்கு முதலில் வைத்த பெயர் தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com