
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன் தங்கராஜ் நாயகனாக நடிக்கும் குமாரசம்பவம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாடா, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குமரன் தங்கராஜன்.
ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் இவர் சின்ன திரையில் அறிமுகமானார். இத்தொடரில் சிறிய பாத்திரத்தில் குறைந்த நாள்கள் இவர் நடித்திருந்தாலும், தன்னுடைய ஆழகான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்தில் கதிர் பாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குப் பிறகு, அமேசான் பிரைமில் வெளியான வதந்தி தொடரில் பிரதான பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
தற்போது, லக்கி மேன் படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படமான குமாரசம்பவம் படத்தில் இவர் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படம் நகைச்சுவைக் கலந்த ஃபீல் குட் திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
மேலும் இப்படத்தில் பால சரவணன் லிவிங்ஸ்டன், வினோத் சாகர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வீனஸ் இன்பொடெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.
இந்நிலையில், குமாரசம்பவம் படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: தமிழ் - தெலுங்கில் உருவாகும் மணிரத்னம் புதிய படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.