ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் பறந்து போ பட பாடல்!

பறந்து போ படத்தின் ’சன் ஃபிளவர்’ பாடல் வெளியீடு
ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் பறந்து போ பட பாடல்!
Published on
Updated on
1 min read

பறந்து போ படத்தில் இடம் பெற்றுள்ள ’சன் ஃபிளவர்’ பாடல் வெளியாகியுள்ளது.

கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் ’பறந்து போ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிகை அஞ்சலி, கும்பலங்கி நைட்ஸ் திரைப்பட நடிகை கிரேஸ் ஆண்டனி, நடிகர் அஜு வர்கீஸ், பாடகர் விஜய் ஜேசுதாஸ் மற்றும் மாஸ்டர் மிதூல் ரயான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படம், வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பறந்து போ படத்தின் ’சன் ஃபிளவர்’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

இதையும் படிக்க: டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com