2014-2023ஆம் ஆண்டுக்கான கத்தார் தெலங்கானா திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

சிறந்த படங்களுக்கான கத்தார் தெலங்கானா திரைப்பட விருதுகள் குறித்து...
Gaddar Telangana Film Awards winning films posters
தெலங்கானா திரைப்பட விருதுகள் வென்ற சில படங்களின் போஸ்டர்கள்...கோப்புப் படங்கள்.
Published on
Updated on
1 min read

தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல மேடைப் பாடகருமான ‘கத்தார்’ பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதுகள் (2014-2023) அறிவிக்கப்பட்டுள்ளன.

டிஎஃப்டிசி (தெலங்கானா ஃபிலிம் டெவலப்மென்ட் கார்பரேஷன்) தலைமையில் ஜூன் 2, 2014 முதல் டிச.31, 2023 ஆம் ஆண்டுக்கான தெலங்கானா திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டுக்கும் 3 சிறந்த படங்களை தேர்வு செய்துள்ளார்கள். இவற்றுடன் கத்தார் சிறப்பு விருதுகள் என 6 பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

2014
முதல் சிறந்த படம் - ரன் ராஜா ரன்

2ஆவது சிறந்த படம் - பாதசாலா

3-ஆவது சிறந்த படம் - அல்லுடு சீனு

2015

முதல் சிறந்த படம் - ருத்ரமாதேவி

2-ஆவது சிறந்த படம் - கான்சே

3-ஆவது சிறந்த படம் - ஸ்ரீமந்தடு

2016
முதல் சிறந்த படம் - ஷாதாமனம் பகவதி

2-ஆவது சிறந்த படம் - பெல்லி சூப்லு

3-ஆவது சிறந்த படம் - ஜனதா கேரேஜ்

2017

முதல் சிறந்த படம் - பாகுபலி - தி கன்க்ளூசன்

2-ஆவது சிறந்த படம் - ஃபிதா

3-ஆவது சிறந்த படம் - காஸி

2018

முதல் சிறந்த படம் - மகாநடி

2-ஆவது சிறந்த படம் - ரங்கஸ்தலம்

3-ஆவது சிறந்த படம் - C/o காஞ்சரபாளேம்

2019

முதல் சிறந்த படம் - மகராசி

2-ஆவது சிறந்த படம் - ஜெர்ஸி

3-ஆவது சிறந்த படம் - மல்லேஷம்

2020

முதல் சிறந்த படம் - அல வைகுந்தபுரம்லோ

2-ஆவது சிறந்த படம் - கலர் ஃபோட்டோ

3-ஆவது சிறந்த படம் - மிடில் கிளாஸ் மெலோடிஸ்

2021

முதல் சிறந்த படம் - ஆர்ஆர்ஆர்

2-ஆவது சிறந்த படம் - அகான்டா

3-ஆவது சிறந்த படம் - உப்பெனா

2022

முதல் சிறந்த படம் - சீதா ராமம்

2-ஆவது சிறந்த படம் - கார்த்திகேயா 2

3-ஆவது சிறந்த படம் - மேஜர்

2023

முதல் சிறந்த படம் - பாலகம்

2-ஆவது சிறந்த படம் - அனுமன்

3-ஆவது சிறந்த படம் - பகவந்த் கேசரி

சிறப்பு விருது - ப்ரஜகவி கலோஜி நாராயணா ராவ் (மறைவுக்குப் பிறகு)

கத்தார் சிறப்பு விருதுகள்

என்டிஆர் தேசிய திரைப்பட விருது - நந்தமுரி பாலகிருஷ்ணா

பைதி ஜெய்ராஜ் திரைப்பட விருது - மணி ரத்னம்

பிஎன் ரெட்டி திரைப்பட விருது - சுகுமார்

நாகிரெட்டி, சக்ரபாணி திரைப்பட விருது - அட்லூரி பூர்ணா சந்திர ராவ்

கந்தா ராவ் திரைப்பட விருது - விஜய் தேவரகொண்டா

ரகுபதி வெங்கய்யா திரைப்பட விருது - யந்தமுரி வீரேந்திரநாத்

இந்த சினிமா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் 14ஆம் தேதி ஹைதாராபாதில் நடைபெறவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com