actress anumo, from heart beat 2 season. (pics from insta)
நடிகை அனுமோல். படங்கள்: இன்ஸ்டா / அனுமோல்

இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்கள்: ஹார்ட் பீட் 2 தொடருக்காக அனுமோலைப் புகழும் ரசிகர்கள்!

ஹார்ட் பீட் 2 இணையத் தொடரின் அமோக வரவேற்புக்காக அனுமோல் கூறியதாவது...
Published on

ஹார்ட் பீட் 2 இணையத் தொடரின் அமோக வரவேற்புக்காக நடிகை அனுமோல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ஹார்ட் பீட் இணையத்தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது.

இந்தத் தொடரில் நடிகைகள் தீபா பாலு, அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டாக்டர் ரதி தியாகராஜன் எனும் கதாபாத்திரத்தில் அனுமோல் அசத்தியுள்ளார்.

தீபக் சுந்தரராஜன் இயக்கிய இந்தத் தொடர் 100-க்கும் அதிகமான எபிசோடுகளைக் கொண்டுள்ளன.

ஹார்ட் பீட் 2 தொடரில் நடிகை அனுமோலின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவருக்கு அளித்த பாராட்டுகளுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிலளித்துள்ளார்.

ஒரு ரசிகர், “இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்கள்? தமிழ் சினிமா உங்களை மிகவும் மிஸ் செய்கிறது” எனக் கூறினார். இதற்கு அனுமோல், “நான் ஏற்கனவே தமிழில் நடித்திருக்கிறேன். நீங்கள்தான் கவனிக்கவில்லை. எனக்கு இப்போது அளிக்கும் ஆதரவுக்கு நன்றிகள். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்” எனக் கூறினார்.

ரசிகர்களின் பேராதரவில் அனுமோல்
ரசிகர்களின் பேராதரவில் அனுமோல்படம்: இன்ஸ்டா / அனுமோல்.

தொடர்ச்சியாக ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வரும் நடிகை அனுமோல் தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒர் இடத்தைப் பிடித்துவிட்டார்.

ரசிகர்களின் பேராதரவில் அனுமோல்.
ரசிகர்களின் பேராதரவில் அனுமோல். படம்: இன்ஸ்டா / அனுமோல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com