
துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மாவை (52) ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரையில் வெளியானது.
ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார்.
இந்தப் படம் இன்று (மே.30) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது, ரசிகர்கள் மீண்டும் பிரகாஷ் வர்மாவின் நடிப்பை மிகவும் புகழ்ந்து வருகிறார்கள்.
யார் இந்த பிரகாஷ் வர்மா?
மக்களிடம் கவனத்தை ஈர்த்த ஓடோஃபோனின் ஜூஜூஸ், பிஸ்லேரி, கிட் கேட் போன்ற விளம்பரங்களை இவர் இயக்கியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குநர் ஏ.கே.லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
தயாரிப்பாளராக இருந்துவரும் இவர் அமெரிக்க இயக்குநருக்காகவும் ஒரு விளம்பரத்தை இயக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.