உயர்கல்வியை முடித்த மகள் தியாவுக்காக நெகிழ்ச்சியில் ஜோதிகா..! நடிகையா, இயக்குநரா?

நடிகை ஜோதிகாவின் மகள் தியா பள்ளிக் கல்வியை முடித்தது குறித்து...
Surya, jyothika with their Daughter Diya school Graduates function.
ஜோதிகா, தியா, சூர்யா. படங்கள்: இன்ஸ்டா / ஜோதிகா
Published on
Updated on
1 min read

தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் அறிமுகமாகிய நடிகை ஜோதிகாவுக்கு சூர்யாவுடன் 2006-இல் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு தியா (17) எனும் மகளும் தேவ் (14) எனும் மகனும் இருக்கிறார்கள். தற்போது, தியா தனது உயர்கல்வியை மும்பையின் பிரபலமான சர்வதேச பள்ளியில் முடித்துள்ளார்.

இதன் பட்டமளிப்பு விழாவில் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் தனது மகளை நினைத்து தானும் தனது பெற்றோரும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். நடிகர் சூர்யாவும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் தியா தனது பள்ளியில் நடக்கும் போட்டிக்காக ஆவணப்படம் ஒன்றினை எடுத்து அதற்காக விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Jyotika daughter Diya film award
விருதுபெற்ற தியா. படம்: இன்ஸ்டா/ ஜோதிகா

தியா நடிகையாக மாறுவாரா அல்லது இயக்குநராக மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் தி கோர், டப்பா கார்டல் இணையத் தொடரும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ.200 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.

diya with their parents jyotika, surya.
மகள் திவ்யா உடன் சூர்யா -ஜோதிகா.படம்: இன்ஸ்டா / ஜோதிகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com