Beautifull Actress anumol. (pic from insta, anumol)
நடிகை அனுமோல். படம்: இன்ஸ்டா / அனுமோல்.

சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்!

நடிகை அனுமோல் ஹார்ட் பீட் 2 தொடரில் சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது குறித்து...
Published on

நடிகை அனுமோல் ஹார்ட் பீட் 2 தொடரில் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்யாததிற்கு நேரமின்மை உள்பட பலவிதமான காரணங்களைக் கூறியுள்ளார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ஹார்ட் பீட் இணையத்தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது.

இந்தத் தொடரில் நடிகைகள் தீபா பாலு, அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டாக்டர் ரதி தியாகராஜன் எனும் கதாபாத்திரத்தில் அனுமோல் அசத்தியுள்ளார்.

தீபக் சுந்தரராஜன் இயக்கிய இந்தத் தொடர் 100-க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்டுள்ளன.

இரண்டாம் பாகத்தில் அனுமோல் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் அனுமோலிடம், “அழகான குரல் இருக்கிறது. பின், ஏன் தமிழில் டப்பிங் செய்யவில்லை” என இன்ஸ்டாவில் கேள்வி கேட்டிருந்தார்.

ரசிகர் கேட்ட கேள்வி.
ரசிகர் கேட்ட கேள்வி.படம்: இன்ஸ்டா / அனுமோல்.

அன்புக்கு நன்றி

இதற்கு பதிலளித்த நடிகை அனுமோல், “ரதி கதாபாத்திரத்திற்கு ஏற்கனவே முதல் சீசனில் அளித்த டப்பிங் குரலே சிறப்பாகவும் பிரபலமாகவும் இருந்ததால் அதுவே பயன்படுத்தப்பட்டது.

மேலும், நான் கேரளாவில் இருப்பதால் சென்னை வர முடியவில்லை. வேறு சில படங்களில் நடிப்பதாலும் என்னால் டப்பிங்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இன்னும் தமிழில் நன்றாக பேச பயிற்சி வேண்டியுருக்கிறது. உங்களின் அன்புக்கு நன்றி” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com