என் மகளுக்காக... இளையராஜாவின் புதிய அறிவிப்பு!

பவதாரணியின் நினைவாக இளையராஜா புதிய முயற்சி...
மகள் பவதாரணியுடன் இளையராஜா
மகள் பவதாரணியுடன் இளையராஜா
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளர் இளையராஜா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் கடந்தாண்டு இலங்கையில் காலமானார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, ஏஐ மூலம் கோட் திரைப்படத்தில் பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இளையராஜா தன் மகள் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (bavatha girls orchestra) ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத் திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரித்துள்ளார்.

விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Summary

ilaiyaraaja announced new orchestra group name as bavatha girls orchestra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com