

நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், சிறந்த நடிகர் விருது மம்மூட்டிக்கும் (பிரம்மயுகம்) சிறந்த நடிகை விருது ஷம்லா ஹம்சாவுக்கும் (பெமினிச்சி ஃபாத்திமா) அறிவிக்கப்பட்டுள்ளது. இது மம்மூட்டி பெறவுள்ள 6-வது மாநில விருதாகும்.
இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்காக மம்மூட்டி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.