நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அப்படத்திற்கு முன் வேறு ஒரு படத்தில் இணைந்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பொடி கே. ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் தன் 63-வது படத்தில் நடிக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மணிரத்னம் படத்திற்குத் தயாராகும் துருவ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.