சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பராசக்தி.
இப்படம் தமிழுக்கு எதிரான மொழித்திணிப்பைப் பேசும் கதையாக எழுதப்பட்டுள்ளது. அண்மையில், படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததால் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான அடியே அலையே பாடல் வருகிற நவ. 6 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.