மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஓடிடியில் பேட் கேர்ள்!

பேட் கேர்ள் திரைப்படம் ஓடிடியில் வெளியானது...

News image
Updated On :5 நவம்பர் 2025, 7:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் வெற்றி மாறன், அனுராக் காஷ்யப் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் தயாரித்த பேட் கேர்ள் திரைப்படத்தை வெற்றிமாறனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத் இயக்கியிருந்தார்.

நாயகியாக அஞ்சலி சிவராமனும் முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்ணின் சுதந்திரமான முடிவுகள், காதல் தேர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பேட் கேர்ள் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஓடிடி வெளியீட்டிலும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

Summary

bad girl movie released in hotstar ott

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.