குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

கேரள மாநில அரசின் விருதுகளில் குழந்தைகளுக்கு அறிவிக்கப்படாததற்கு தேவனந்தா ஜிபின் எதிர்ப்பு
குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!
Published on
Updated on
1 min read

கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளில் குழந்தைகளிடம் நடுவர் குழு கண்மூடித் தனம் காட்டுவதாக குழந்தை நட்சத்திரமான தேவனந்தா ஜிபின் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளில் குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது தேர்வு செய்யப்படாததைக் குறிப்பிட்டு, நடுவர் குழுத் தலைவர் பிரகாஷ் ராஜுக்கு 12 வயது தேவனந்தா ஜிபின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடகப் பதிவில் ``தேவனந்தா, குழந்தைகள் முன்பாக கண்களை மூடிக்கொண்டு, இருட்டாக இருப்பதாகச் சொல்லாதீர்கள். குழந்தைகளும் இந்தச் சமூகத்தின் ஒரு பகுதியினர்தான்.

2024, மலையாள திரைப்பட விருதுகள் மூலம், அடுத்த தலைமுறையினரிடம் நடுவர் குழு கண்மூடித்தனமாக செயல்படுகிறது.

ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன், கு, பீனிக்ஸ், ஏஆர்எம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தைகள் நடித்துள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு விருது வழங்கப்பட்டிருந்தால், அது பல குழந்தைகளுக்கு ஒரு உந்து சக்தியாக மாறியிருக்கும்,

குழந்தைகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், அவர்களும் சமூகத்தின் ஒரு பகுதி என்று நடுவர் குழுத் தலைவர் கூறினாலும், குழந்தைகளின் உரிமைகளைப் புறக்கணித்தது ஏற்கத்தக்கதல்ல.

அனைத்து ஊடகங்கள், திரைப்படத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் இதனைப் பற்றி விவாதிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தேவனந்தா ஜிபின் - மல்லிகாபுரம், தொட்டப்பன், மை சான்டா, சைமன் டேனியல் அன்ட் நெய்மர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநில அரசின் விருதுகளில் குழந்தைகளுக்கான விருது தேர்வு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட பிரகாஷ் ராஜ், ``இந்தச் சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளுமானதுதான்.

குழந்தைகள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும்.

குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைப்பதாலோ, ஹீரோ அல்லது ஹீரோயின்களின் குழந்தைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாலோ அது குழந்தைகள் சினிமா ஆகிவிடாது. குழந்தைகள் வெறும் உபகரணங்கள் போலவே காட்டப்படுகின்றனர்.

ஆகையால், குழந்தைகளுக்கான படம் மற்றும் அவர்களுக்கான பாத்திரத்தை எழுதும்படி திரையுலகுக்கு அழுத்தமாக கோரிக்கை வைக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கைதி - 2 என்ன ஆனது?

Summary

Devanandha blasts Kerala State Awards for ignoring child actors

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com