சின்ன மருமகள் தொடரில் மின்னலே சீரியலில் நாயகனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் ஷிவ சதீஷ் இணைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் சின்ன மருமகள்.
மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் தமிழ்ச்செல்வியின் தங்கை தனம் பாத்திரத்தில் நடிகை தர்ஷினி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க, புதிய பாத்திரத்தை தொடர் குழு களமிறக்கியுள்ளது.
அதன்படி, நடிகர் ஷவ சதீஷ் இந்தப் புதிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
யார் இவர்?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மின்னலே தொடர் மூலம் சின்ன திரையில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷிவ சதீஷ்.
மின்னலே தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், சித்திரம் பேசுதடி தொடரிலும் நாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

ஷிவ சதீஷ்
தொடர்ந்து, ரஞ்சிதமே தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது சின்ன மருமகள் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஷிவ சதீஷ், சின்ன மருமகள் தொடரில் இணைந்துள்ளதால், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், மேலும் ஸ்வாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மகளே என் மருமகளே தொடரில் இணைந்த சிறகடிக்க ஆசை நடிகர்!
Summary
Shiva Sathish plays a key role in the series Chinna Marumakal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










