

மறுவெளியீட்டில் விஜய்யின் கில்லி, ஹிந்தி படமான தும்பாட் ஆகியவற்றைப் பின்னுக்குத்தள்ளி ராஜமௌலியின் பாகுபலி: தி எபிக் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் பாகுபலி முதல் பாகம் 2015 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டிலும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடுப் போட்டது. இரண்டு பாகங்களும் சேர்த்து உலகளவில் ரூ. 2400 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தன.
இந்த நிலையில், இரண்டு படங்களையும் இணைத்து பாகுபலி: தி எபிக் என்ற பெயரில் படம் வெளியிடப்படும் என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருந்தார். அதன்படி, 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் அக்.31 ஆம் தேதி உலகளவில் மொத்தமாக 1,150-க்கும் அதிகமான திரைகளில் இந்தப் படம் வெளியானது. .
அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் 210 திரையரங்குகளிலும் வெளியானது. அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 144 திரையரங்குகளிலும் வெளியானது.
இந்தப் படம் முதல்நாள் டிக்கெட் மட்டும் சுமார் ரூ. 10 கோடிக்கு விற்பனையானது. மேலும், மொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ரூ. 31 கோடி வசூலித்துள்ளதாகத தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகுபலி யுனிவர்ஸில் கதைக்களத்துடன் அனிமேஷன் தரத்தில் பாகுபலி: தி எட்டர்னல் வார் - Baahubali: The Eternal War என்ற படமும் உருவாவதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.