/

கவர்ச்சியும் நடனமும்... பெத்தி படத்தின் முதல் பாடல்!

நடிகர் ராம் சரணின் பெத்தி படத்தின் முதல் பாடல் குறித்து...

News image

ராம் சரண், ஜான்வி கபூர். - படங்கள்: யூடியூப் / டீ-சீரிஸ் தெலுங்கு.

Updated On :7 நவம்பர் 2025, 12:34 pm IST

ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்தின் முதல் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

இந்த விடியோவில் நடிகை ஜான்வி கபூரின் வசீகரமும் ராம் சரணின் நடனமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் பெத்தி படத்தில் நடித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. பெத்தி படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The first song video of Ram Charan's film Pethi has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.