சொல்ல முடியாத வலிகள்... ரஷ்மிகாவின் உருக்கமான பதிவு!

தி கேர்ள்பிரண்ட் திரைப்படம் குறித்து ரஷ்மிகாவின் நீண்ட பதிவு...
Rashmika about The Girlfriend
தி கேர்ள்பிரண்ட் படத்தில் ரஷ்மிகா... படங்கள்: இன்ஸ்டா / ரஷ்மிகா மந்தனா.
Published on
Updated on
1 min read

தி கேர்ள்பிரண்ட் திரைப்படம் குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படம் இன்று (நவ.7) முதல் உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் தி கேர்ள்பிரண்ட் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் ரஷ்மிகாவுடன் அனு எம்மானுவேல், ரோஹினி, தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் மகேஷ் நடித்துள்ளனர்.

கீதா ஆர்ட்ஸ் சார்பாக அல்லு அரவிந்த் தயாரித்த இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு குவிந்துவருகிறது.

இந்நிலையில் இது குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா படக்குழு, படத்தின் கதை, இயக்குநர் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்த நீண்ட பதிவில் கூறியதாவது:

இந்தப் படத்தைப் பற்றி எங்கிருந்து தொடங்குவது... ராகுல் இந்தப் படக் கதையைப் பற்றிக்கூறும்போது நான் அழுதேன். என்னால் சொல்ல முடியாத பல விதங்களில் என் இதயத்தைக் கிள்ளியது.

நான் சிந்தித்தேன். இதை நான் அனுபவித்து இருக்கிறேன். இதெல்லாம் நடக்கும்போது கவனிக்காமல் எப்படி இருந்தேன் எனத் தெரியவில்லை.

இந்த வார்த்தைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஒரு ஆணிடம் இருந்து எப்படி வந்தது என அதிசயிக்கிறேன். பலரும் புரிந்துகொள்ளாததை அவர் செய்துள்ளார்.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இரண்டு விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.

1. இந்தக் கதையில் நடிக்கவில்லை எனில் பாவம் ஆகிவிடும்.

2. காலத்துக்குமான நண்பன் ராகுல்.

பூமா எனக்கு மிகவும் சிறப்பான கதாபாத்திரம். ஏனெனில் அது பெரும்பாலும் என்னைப் பற்றியது.

அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது என்னை நானே கூடுதலாக அறிந்துகொண்டேன்.

தினமும், ராகுல் எனக்கு காட்சிகளை விளக்கும்போது எனக்கு வேறெதும் கேள்விகள் தேவைப்படவில்லை.

எனது இதயம் காதல், பெருமை, மகிழ்ச்சியில் நிரம்பியுள்ளது. இந்தப் படத்தினை உருவாக்கும்போது நாங்கள் அனுபவித்ததை நீங்களும் அனுபவியுக்க வேண்டுகிறேன்.

பூமா எனக்கு அரிதானது. அவளை பத்திரமாக நேசத்துடன் ஆதரியுங்கள். இப்படிக்கு உங்கள் பூமா எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com