‘ஜனநாயகன்’: ‘தளபதி கச்சேரி’ பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிப்பு

‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய்
Published on
Updated on
1 min read

‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். இப்படத்தை கேவிஎன் ப்ரொடக்‌ஷன் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவான முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்தால் அது ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

கமல் - அன்பறிவ் படத்தின் தொழில்நுட்ப குழுவினர் அறிமுகம்!

படத்தின் முதல் பாடல் நவ. 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் ‘தளபதி கச்சேரி’ எனத் தொடங்கும் அந்த பாடல் நாளை மாலை 6.03-க்கு வெளியாகும் என பாடல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Summary

The first single from the much-anticipated Tamil film Jana Nayagan starring Vijay is set to Release on tommorow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com