இது மம்மூட்டிக்கான அங்கீகாரம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மம்மூட்டியின் பிரம்மயுகம் குறித்து...
mammootty
மம்மூட்டி
Published on
Updated on
1 min read

நடிகர் மம்மூட்டியின் திரைப்படத்துக்கு நிறைய அங்கீகாரங்கள் கிடைத்து வருவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் தூண்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. 55 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் என்பதால் நூற்றுக்கணக்கான இயக்குநர்களுடன் பணியாற்றி மலையாள சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றியும் உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் மம்மூட்டி கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கிய இதுவரை 7 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இதில், அனைத்து திரைப்படங்களும் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றவையே. தற்போது, களம் காவல் வெளியீட்டிற்காக மம்மூட்டி காத்திருக்கிறார்.

இந்த நிலையில், இவர் நடித்த பிரம்மயுகம் திரைப்படத்திற்கு கேரள மாநில அரசின் சிறந்த நடிகர் விருது உள்பட 4 விருதுகளுக்குத் தேர்வானது.

அதனைத் தொடர்ந்து, பிரம்மயுகம் திரைப்படம் ஆஸ்கர் மியூசியத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரையிடப்பட உள்ளதையும் அறிவித்துள்ளனர்.

பிரம்மயுகம் திரைப்படத்திற்காக மாநில விருதும் அப்படம் ஆஸ்கர் வரை செல்வதால் உலக சினிமா ரசனையாளர்களின் கவனத்திற்கும் செல்ல உள்ளது மம்மூட்டிக்கு கிடைத்த நல்ல அங்கீகாரங்களில் ஒன்று என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

fans wishes to mammootty for his brammayugam movie gets awards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com