பிக் பாஸ்: இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார்யார்?

பிக் பாஸில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றவர்கள் பற்றி...
பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்Photo: JioHotstar
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 6-வது வாரத்தில் வெளியேறத் தேர்வு செய்யப்பட்ட (நாமினேஷன்) நபர்களின் பட்டியலில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்துள்ளது. கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறிய துஷார், பிரவீன் உள்பட இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், 4 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்பட தற்போது 17 பேர் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், 6-வது வாரத்தின் நாமினேஷன் நேற்று ஒளிபரப்பப்பட்டது. கேப்டனாக சபரி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரை நாமினேஷன் செய்ய முடியாது.

மேலும், கடந்த வாரம் பிக் பாஸ் கொடுத்த ரகசிய டாஸ்க்கில் வெற்றி பெற்ற சாண்ட்ரா - பிரஜன் இருவரில் ஒருவருக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பிரஜன் நாமினேஷனில் இருந்து விலகிக் கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

அதேபோல், சாண்ட்ரா - பிரஜனுக்கு நேரடியாக ஒருவரை நாமினேஷன் பட்டியலுக்கு அனுப்பும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி சுபிக்‌ஷாவை நாமினேஷன் செய்தனர்.

பின்னர், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரைக் காரணத்துடன் நாமினேட் செய்தனர்.

அதனடிப்படையில், வியானா, விக்ரம், சுபிக்‌ஷா, சாண்ட்ரா, ரம்யா, பார்வதி, கனி, திவாகர், திவ்யா மற்றும் அரோரா போட்டியில் இருந்து வெளியேறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 7 வார நாமினேஷனில் முதல்முறையாக கனி பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss: Who is on the nomination list this week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com