

நடிகை அபிராமி குறித்து நடிகர் டிடிஎஃப் வாசன் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அபிராமியும் அவர் பேசியதற்கு பறக்கும் முத்தம் அளித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன.
இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் நடிகர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஐபிஎல் (இந்தியன் பீனல் கோட்).
அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இதில் நடிகர்கள் கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் நேற்று (நவ.10) வெளியானது.
இந்த நிகழ்வில் டிடிஎஃப் வாசன் பேசியதாவது:
நடுக்கத்துடன்தான் பேச வருகிறேன். முதல்முறை என்பதால் என்னுடைய படத்தில் தவறுகள் இருக்கலாம். நீங்கள் பார்த்து விமர்சித்தால் கற்றுக்கொண்டு திருத்திக் கொள்வேன்.
எங்களுடைய செல்லக்குட்டி அபிராமி மேம், மிகவும் க்யூட்டானவர். அவரது க்யூட்டுக்கு அளவே இல்லை. (அபிராமி பறக்கும் முத்தம் கொடுப்பார்).
நானும் அபிராமி மேம், கிஷோர் சார் இணைந்து செய்த ரீல்ஸ் வைரலானது. பிறகு அதைப் பார்த்த போஸ் வெங்கட் சார், ’என்ன வாசன், நாம் எப்போது ரீல்ஸ் செய்வது?’ எனக் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.