திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நிலா காயும்... மம்மூட்டியின் களம்காவல் படத்தின் முதல் பாடல்!

நடிகர் மம்மூட்டியின் களம்காவல் படத்தின் முதல் பாடல் குறித்து...

News image

களம்காவல் படத்தில் மம்மூட்டி. - படம்: எக்ஸ் / மம்மூட்டி.

Updated On :11 நவம்பர் 2025, 9:27 pm IST

நடிகர் மம்மூட்டியின் களம்காவல் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படமாக களம் காவல் என்கிற படத்தை தயாரித்து வருகிறது.

துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனும் வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புழு, பிரம்மயுகம், ரோர்சாக் உள்ளிட்ட படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த மம்மூட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ளது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் ’நிலா காயும்’ எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Summary

The first song from actor Mammootty's film Kalamkaval has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.