குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ள ஸ்ரேயா..! புஷ்பா சமந்தாவை விஞ்சுவாரா?

நடிகை ஸ்ரேயாவின் நடன விடியோ குறித்து...
actress Shriya Saran
நடிகை ஸ்ரேயா சரண். படம்: எக்ஸ் / எஸ்2 மீடியா
Published on
Updated on
1 min read

நடிகை ஸ்ரேயா சரண் நான் வயலன்ஸ் எனும் படத்தில் நடனம் ஆடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் விடியோ விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் நான் வயலன்ஸ் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

ஏகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ ஸ்ரிஷ், யோகி பாபு, அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நடிகை ஸ்ரேயா கடைசியாக மிராய் எனும் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

நடிகை சமந்தா புஷ்பா முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்தப் பாடல் இந்தியா முழுவதும் புகழ்ப்பெற்றது.

அதேமாதிரி நடிகை ஸ்ரேயாவும் புகழ்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மதுரையில் 90களில் காலகட்டத்தில் சிறையில் நடைபெறும் கதையாக இருக்குமெனக் கூறப்படுகிறது.

Summary

The film crew has announced that actress Shreya Saran has danced in the film Naan Violence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com