ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் பாடிய ஷ்ருதி ஹாசன்!

ராஜமௌலி படத்தில் ஷ்ருதி ஹாசன்...
 மகேஷ் பாபு, ஷ்ருதி ஹாசன்
மகேஷ் பாபு, ஷ்ருதி ஹாசன்
Updated on
1 min read

நடிகை ஷ்ருதி ஹாசன் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி திரைப்படத்தில் பாடியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் முதல் போஸ்டரை நவ. 15 ஆம் தேதி வெளியிட ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நிகழ்வை நடத்தவும் அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின்போது போஸ்டருக்கான பாடல் விடியோவும் வெளியாகும் எனத் தெரிகிறது.

ஆச்சரியமாக, சம்ஹாரி என்கிற இப்பாடலை நடிகை ஷ்ருதி ஹாசன் பாடியுள்ளார். எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இப்பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Summary

shruti haasan sung a song in ss rajamouli and mahesh babu movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com