இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான படால்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்துகொண்டே இருந்தாலும் 2000-களின் தலைமுறையின் இசை ரசனையையும் சுவையையும் மாற்றியவர்களில் முக்கியமானவர் ஏ. ஆர். ரஹ்மான்.
தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என பல துறைகளில் ஆட்சி செய்த இசைப்புயலுக்கு இந்தியளவில் ரசிகர்கள் கொட்டிக் கிடக்கின்றனர்.
ஏ. ஆர். ரஹ்மானின் காலம் முடிந்துவிட்டது எனும்போதெல்லாம் அதிரடியாக, இதைக் கேளுங்க.. என அற்புதமான மெட்டுகளுடனும் பின்னணி இசையுடனும் வருவார்.
அப்படி, இந்த முறை இரண்டு திரைப்படங்களின் மூலம் தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான இரண்டு பாடல்கள் ரசிகர்களின் இதயத்தைச் சுண்டி இழுத்ததுடன் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதேபோல், நடிகர் ராம் சரண் நடிக்கும் பெட்டி திரைப்படத்தின் சிக்கிரி பாடல் அண்மையில் வெளியாகி 60 மில்லியன் பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது.
ரஹ்மான் அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியதுடன், “பெரிய பாய் (ஏ. ஆர். ரஹ்மான்) பெரிய பாய்தான்” என செல்லமாக பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.