மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைசன் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பைசன் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

பைசன் காளமாடன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மாரி செல்வராஜ்.

Updated On :12 நவம்பர் 2025, 4:51 am

மாரி செல்வராஜின் பைசன் திரைப்பட வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு, ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் ஓடியது. இன்னும் பல திரையரங்களில் பைசன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Story image

இதனிடையே, பைசன் திரைப்படம் வரும் நவ. 14 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Summary

Bison collection Official announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.