

பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி ராம் கோபால் வர்மாவுக்கே தந்தை போன்றவர் சந்தீப் வங்கா எனக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இளையராஜா இசையில் ராம் கோபால் வர்மாவின் முதல் படமான சிவா திரைப்படம் (1989) நவ.14ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.
இந்தப் படத்திற்கான கலந்துரையாடலில் நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் சந்தீப் வங்கா, இயக்குநர் ராம் கோபால் வர்மா இணைந்து பேசினார்கள்.
அந்த நேர்காணலில் ராம் கோபால் வர்மா பேசியதாவது:
அர்ஜுன் ரெட்டி படத்தின்போது ஒரு நிகழ்ச்சி மேடையில் ராஜமௌலி ராம் கோபால் வர்மா மாதிரி ஒருவர் வருவது மிகவும் அரிதானது. அப்படியானவர்தான் சந்தீப் வங்கா என்றார். எனக்கு இது குறித்து எந்த கருத்தும் அப்போது இல்லை.
பின்னர், அனிமல் படம் பார்த்துவிட்டு ராஜமௌலி என்னிடம் பேசினார். நான் உங்களை சந்தீப்புடன் ஒப்பிட்டதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றார். ஏன் என்றேன்? அதற்கு அவர், ‘சந்தீப் ராம் கோபால் வர்மாவுக்கே தந்தை’ என்றார். ஏன் அவர் அப்படி கூறினார்?
அனிமல் படம் அப்படி இருந்தது. அதன் கதாபாத்திர உருவாக்கம், காட்சியமைப்புகள் எல்லாமே புதியது.
இதுவரையான பொதுவான திரைப்படங்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்துடியான ஒரு படம் அது. திரைக்கதை, காட்சிகள் அமைப்பு எல்லாமே அசலானது என்றார்.
இதைக் கேட்ட நாகார்ஜுனா வாயடைத்துப் போய் இருவரையும் பார்த்துக்கொண்டிருப்பார்.
சந்தீப் வங்கா தற்போது, நடிகர் பிரபாஸை வைத்து ஸ்பிரிட் படத்தை இயக்கி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.