நடிகர் ரஜினிகாந்த்தின் 173வது திரைப்படத்தின் புதிய இயக்குநர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது இப்படத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுவதாக சுந்தர்.சி அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த திடீர் அறிக்கை ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய இயக்குநர் யார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
சுந்தர். சிக்கு முன்பே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ரஜினியின் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
அதனால், இப்படத்தைக் கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சில நாள்களுக்கு முன்புதான் கார்த்திக் தன் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஜினி படத்திலிருந்து சுந்தர். சி விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.