

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தில் நடிகர் குல்ஷன் தேவய்யா வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார்.
பாலிவுட் நடிகரான இவர் குல்ஷன் தேவய்யா (வயது 47) தமிழ் சினிமாவில் அறிமுகாக இருக்கிறார்.
தமிழில் லெகசி என்ற இணையத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்குகிறார். இந்தப் படத்தில்தான் குல்ஷன் தேவய்யா அறிமுகமாக இருக்கிறார்.
இந்தத் தொடரில் காவலதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து குல்ஷன் தேவய்யா பேசியதாவது:
ஹிந்தியில் 14 ஆண்டுகளாக நடித்துள்ளேன். தற்போது, புதிய விமானத்தில் ஏறியுள்ளேன்.
புதிய மொழி படத்தில் நடிக்க ’லெகசி’ எனக்கு வாய்ப்பளித்துள்ளது. வேலை, குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் மாற்றி மாற்றிசெய்யும் ஒரு காவலதிகாரியாக நடித்துள்ளேன்.
இந்த வெறுப்பினை நடிப்பில் காட்டுவது சவாலானதாக இருக்கிறது.
அனுபமிக்க மாதவன், நிமிஷா சஜயன், கௌதம் கார்த்திக் உடன் நடிப்பது கற்றல் அனுபவம்தான். அவர்கள் அனைவருமே விருப்பத்துடன் நடிக்கிறார்கள். நானும் எனது சிறந்த நடிப்பை தர இருக்கிறேன் என்றார்.
இந்தத் தொடரில் ஆர். மாதவன், கௌதம் கார்திக், நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நடிகர் குல்சன் தேவய்யா ஹிந்தியில் கடந்த 2004 முதல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.