

நடிகை ரஷ்மிகா மந்தனா ’தி கேர்ள்பிரண்ட்’ படத்தின் சிறப்பான நடிப்பிற்காக தனக்கு தேசிய விருது தேவைப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்தப் படம் கடந்த நவ.7ஆம் தேதி வெளியாகியது.
பெண்களை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படத்தில் அனு எம்மானுவேல், தீக்ஷித் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படத்தில் ரஷ்மிகாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
இதற்காக இவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டுமென தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உள்பட பலரும் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகை ரஷ்மிகா இது குறித்து பேசியதாவது:
நீங்கள் அனைவருமே புரிந்துகொண்டீர்கள். எங்களுடைய நோக்கம் என்னவென்று நீங்கள் புரிந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
நீங்கள் படத்துடன் ஒன்றிவிட்டீர்கள். அதுவே எனக்குப் பெரிய விருதுதான். தேசிய விருது உள்பட எந்த விருதுவுமே எனக்குத் தெரியாது, இனிமேல் அவை தேவையில்லை.
நீங்கள் அனைவரும் படத்தினைப் பார்த்து உணர்கிறீர்கள் இல்லையா? அதுபோதும். எனக்கு அதுவே பிடித்துவிட்டது. இப்போது என்ன செய்வதென தெரியவில்லை. அனைவருக்கும் மிக்க நன்றி எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.