காந்தா திரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பு பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகையாக உள்ளார். இவர் ஹிந்தியில் யாரியான் - 2 படம் மூலமே நடிகையாக சினிமாவுக்கு அறிமுகமானவர். நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் பாக்யஸ்ரீக்கு தெலுங்கில் மிஸ்டர் பச்சான் மற்றும் கிங்டம் படங்களில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது.
தற்போது, காந்தா மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இதில், நடிகையாகவும் துல்கரின் காதலியாகவும் நடித்திருக்கிறார்.
திரையரங்குகளில் வெளியான காந்தா கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு கவனம் கிடைத்துள்ளது.
மேலும், நாயகியான பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைய படங்களில் நடிக்காமலேயே குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதனால், பாக்யஸ்ரீ போர்ஸ் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அஜித் பட பாடலைப் பாடிய பிகாரின் இளம் எம்எல்ஏ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.