

மிடில் கிளாஸ் திரைப்படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அப்படத்தின் திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகயுள்ள மிடில் கிளாஸ் திரைப்படத்தின் புரமோஷனை படத்தில் நடித்த நடிகர்கள் முனீஸ்காந்த், குரோஷி ஆகியோர் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது.
அதேபோல் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறும். அனைவரும் ஆதரவு தர வேண்டும், மிடில் கிளாஸ் திரைப்படம் குடும்பம், திரில்லர் என பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி உள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோர்தான் தனக்கு ரோல் மாடலாக உள்ளதாக குறிப்பிட்ட குரோஷி, விஜயகாந்த் தான் சாப்பிடுவதை மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்ற நினைத்ததைதான் இந்தப் படத்தில் கடைசியாக சொல்ல வரும் மெசேஜாக உள்ளது எனத் தெரிவித்தார்.
திரையரங்குகள் போதுமான அளவிற்கு கிடைத்துள்ளது. மக்களை திரையரங்கிற்கு கொண்டு வருவதே பெரிய விஷயமாக உள்ளது.
வாரத்துக்கு 6 படங்கள் வெளியாகக் கூடிய சூழ்நிலையில் நிறைய திரைப்படங்கள் வந்ததே தெரியாமல் உள்ளது. எங்களுடைய படம் வந்திருக்கு என்ற தகவல் தெரிந்தால் போதும். நிறைய படங்கள் வந்தாலும் கதை நன்றாக இருந்தால் சிறிய படமாக இருந்தாலும் மக்கள் ஆதரவு கொடுக்கிறார்கள்.
அதை நம்பித்தான் இந்த புரமோஷனை நாங்கள் செய்து வருகிறோம். திரைப்படத்தை வந்து பாருங்கள் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.