ஹிந்தி திரைப்படத்தைப் புகழ்ந்த ஹாலிவுட் இயக்குநர் ஸ்கார்செஸி!

ஹோம்பவுண்ட் என்ற ஹிந்தி திரைப்படம் குறித்து லெஜண்டரி இயக்குநர் பேசியதாவது...
Neeraj Ghaywan with Martin Scorsese.
மார்டின் ஸ்கார்செஸு உடன் நீரஜ் கவான். படம்: யூடியூப் / தர்மா புரடக்‌ஷன்ஸ்.
Published on
Updated on
1 min read

ஹிந்தி திரைப்படம் குறித்து பிரபல ஹாலிவுட் லெஜெண்டரி இயக்குநர் மார்டின் ஸ்கார்செஸி புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தப் படத்துக்கு அவர் நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் கவான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக இந்தப் படம் அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தர்மா புரடக்‌ஷன் சார்பாக உருவாகியுள்ள இந்தப் படம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நியூயார்க்கில் இந்தப் படத்தினை ஸ்கார்செஸி இந்த மாதத்தின் தொடக்கத்தில் சிறப்புத் திரையிடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தர்மா புரடக்‌ஷன்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் மார்டின் ஸ்கார்செஸி உடனான உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பேசியதாவது:

நாங்கள் இந்தப் படத்தில் வேலைப் பார்த்தது மகிழ்ச்சி. திரைக்கதையின் வழியாக பலமுறை இதன் நாயகர்களைப் பார்த்துள்ளோம்.

என்னுடைய கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவ்ர் மூன் படத்தில் மூழ்கி இருந்தபோதும் இந்தப் படக்கதை எனக்கு நினைவுக்கு வந்தது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தக் கதையுடன் நான் மூன்றாண்டுகளாக இருந்துள்ளேன்.

இந்தப் படத்தை அமெரிக்கர்கள் பார்ப்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

இந்தப் படம் உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு இது தெரியாது.

படத்தில் அறிவுரை வழங்காமல், அவர்களது வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியை நீங்கள் காட்டிய விதம் எனக்குப் பிடித்திருந்தது என்றார்.

Summary

Hollywood legend Martin Scorsese, who serves as an executive producer on Neeraj Ghaywan's directorial "Homebound", said he loved the film and has watched it several times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com