

மகளே என் மருமகளே தொடர் பிரைம் டைம்(Prime Time) எனப்படும் முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மகளே என் மருமகளே.
இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் நேரமான பிரைம் டைம் எனப்படும் மாலை 6 மணிக்கு மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மகளே என் மருமகளே தொடரில் நவீன் என்ற பாத்திரத்தில் நடிகர் பிரணவ் இணைந்த நிலையில், பல திருப்புமுனைகள் ஏற்பட்டு, தொடரின் விறுவிறுப்பு கூடியுள்ள நிலையில், முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு இந்தத் தொடர் மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் அகண்டா - 2!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.