தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகும் அய்யனார் துணை சீரியல்! குவியும் வாழ்த்து!

அய்யனார் துணை தொடருக்கு கிடைத்த அங்கீகாரம் தொடர்பாக...
அய்யனார் துணை தொடரிலிருந்து...
அய்யனார் துணை தொடரிலிருந்து...இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

அய்யனார் துணை தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதையடுத்து, இந்தத் தொடர் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.

இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.

நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தச் சூழலில் அய்யனார் துணை தொடர், தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது.

அய்யனார் துணை தொடர் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டு ஸ்டார் மா தொலைக்காட்சியிலும் மலையாள மொழியில் ரீமேக் செய்யப்பட்டு ஏசியா நெட் தொலைக்காட்சியிலும் கன்னடா மொழியில் ரீமேக் செய்யப்பட்டு கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

அய்யனார் துணை தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே, மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது, இந்தத் தொடருக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தொடர் குழுவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

அய்யனார் துணை தொடரின் தெலுங்கு மொழி மறுஉருவாக்கத்தில் தீபக், அஜய் சத்யநாராயணா, நிஷா உள்ளிட்ரோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Following the positive response from the audience to the Ayyanar thunai series, the series is being remade in South Indian languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com