உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கோரிக்கை!

பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தது குறித்து...
சபரி அருகே திவ்யா, கமருதீன்
சபரி அருகே திவ்யா, கமருதீன்படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளைப் போட்டியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் என்றும் ரசிகர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அழாத சபரிநாதன், நேற்று (நவ. 16) உடைந்து அழுது மற்றவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

மற்றவர்களின் நன்பதிப்பைப் பெற வேண்டும் என்று நினைத்தே பலரைக் காயப்படுத்தியுள்ளதாகவும், போட்டியின்போது மற்றவர்களின் மீதான அக்கறை இயல்பாகவே குறைந்துவிடுகிறது என்றும் மன்னிப்புக்கோரி அழுதார்.

இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், மற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள் எனப் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

சபரிநாதன் அழுதபோது பலரும் அவன் அழுகட்டும் என காத்திருந்தனர். ஏனெனில் நிகழ்ச்சியின்போது உடைந்து அழுவது நல்லதுதான், அழுதுவிட்டு சிந்தித்துப் பாருங்கள் என விஜய் சேதுபதி அறிவுரை கூறியிருந்தார்.

இதன்படி, பலரை அமரவைத்துப் பேசிய சபரி, தான் மன்னிப்புக் கேட்க நினைத்த பலரிடமும் விளக்கம் கூறி மன்னிப்புக்கேட்டு அழுதார். சபரியின் இந்த செயல் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரையும் கண் கலங்க வைத்துவிட்டது.

சக போட்டியாளர்கள் முன்பு அழுது மன்னிப்புக்கோரிய சபரி
சக போட்டியாளர்கள் முன்பு அழுது மன்னிப்புக்கோரிய சபரிபடம் - எக்ஸ்

அழுது முடித்து வந்த திவ்யா, சபரியை எழுப்பி கட்டியணைத்து அவருக்கு ஆறுதல் கூறினார். சபரியின் நண்பர் கமருதீனும் சபரிக்கு ஆறுதலாக எழுந்து வந்து அவரை அணைத்துக்கொண்டார்.

திவ்யாவுக்கு எதிராக பல முறை சபரி குரல் எழுப்பியுள்ளார். இதேபோன்று, கமருதீனுக்கும் சபரிக்கும் இடையேயும் பலமுறை முரண்பாடுகள் எழுந்துள்ளன. இருந்தபோதும், சபரி அழும்போது இவர்கள் இருவரும் வந்து சபரியை சமாதானம் செய்தது ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளது.

இதையும் படிக்க | உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

Summary

bigg boss 9 tamil sabari crying divya ganesan kamrudhin console

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com