

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பங்கேற்றுள்ளார்.
தனது இணையத் தொடரின் புரமோஷனுக்காக பிக் பாஸில் அவர் தனது படக்குழுவுடன் பங்கேற்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7வது வாரத்தை எட்டியுள்ளது. 6வது வாரத்தின் இறுதியில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்துக்கு இசைக்கலைஞர் எஃப்ஜே கேப்டனாகியுள்ளார்.
ஒருசில வாரத்தின் தொடக்கத்தில் புரமோஷன் நிகழ்ச்சியாக பிக் பாஸ் அவ்வபோது மாறுவதுண்டு. அந்தவகையில் இம்முறை விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள நடுசென்டர் என்ற இணையத் தொடரின் புரமோஷனுக்காக குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த இணையத் தொடரில் சூர்யா சேதுபதியுடன் இணைந்து 10 பேர் நடித்துள்ளனர். கூடைப்பந்து விளையாட்டுக் களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடரில் சசிகுமார் (பயிற்சியாளராக) கலையரசன் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நரு நாராயணன் இயக்கியுள்ள இந்த இணையத் தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
இதனிடையே நடுசென்டர் புரமோஷனுக்காக இதில் நடித்த சூர்யா சேதுபதி, முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆஷா சரத் உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.
நடுசென்டர் இணையத்தொடர் குறித்துப் பேசிய சூர்யா சேதுபதி, ''இந்த இணையத் தொடரில் என்னுடன் சேர்ந்து 10 பேர் அறிமுகமாகின்றோம். இங்கு எங்கள் இணையத் தொடரின் புரமோஷன் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், அவரின் மகன் அதே நிகழ்ச்சியில் புரமோஷனுக்காக பங்கேற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: பெண்களின் காவலர் நடிகர் கமருதீன் - கனி விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.