

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய திரைப்பட இயக்குநர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அடுத்த சில நாள்களிலேயே கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார். திடீர் அதிர்ச்சியாக இது அமைந்தது.
இதனால், தலைவர் 173 திரைப்படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், நடிகரும் ரஜினியின் முன்னாள் மருமகனுமான தனுஷ் இப்படத்தை இயக்க, தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பின்பும் ரஜினியுடன் நல்ல உறவிலேயே தனுஷ் இருந்து வருகிறார். முக்கியமாக, ரஜினியின் தீவிர ரசிகரான தனுஷே இப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்களும் கருதுகின்றனர்.
தனுஷ் இயக்கிய ராயன் மற்றும் இட்லி கடை திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.