நடிகர் ரஜினிகாந்த்துக்கு நடிக்க சொல்லிக்கொடுத்த ஆசிரியர் கோபாலி காலமானார்.
நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் நடிகராக முயற்சித்தபோது அவர் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரியில் இணைந்தார். அங்கு, இவருக்கு நடிக்க கற்றுக்கொடுத்தவர் ஆசிரியர் கோபாலி.
இவரே, நடிகர் ரஜினிகாந்த்தை இயக்குநர் பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதுவே, ரஜினியின் சினிமா வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஆசிரியர் கோபாலி இன்று காலமானர்.
இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் பத்திரிகையாளராக பணியாற்றியதுடன் எண்ணற்ற திரைப்படங்களுக்கு திரை விமர்சனமும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.