பாலய்யாவின் 111 ஆவது படத்தில் இணைந்தார் நயன்தாரா!

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111 ஆவது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளது குறித்து...
பாலய்யாவின் 111 ஆவது படத்தில் இணைந்தார் நயன்தாரா!
Updated on
1 min read

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111 ஆவது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்.

பாலய்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் திரைப்படங்களில் வரும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே மொழிகளைக் கடந்த ரசிகர்கள் அவருக்கு ஏராளம்.

இந்த நிலையில், நடிகர் பாலய்யாவின் 111 ஆவது திரைப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். வரலாற்று கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் பாலய்யாவின் 111 ஆவது படத்தில் பிரபல நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இன்று (நவ. 18) சிறப்பு விடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, நடிகர் பாலய்யா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் ஜெய் சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தனுஷ் மேலாளர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!

Summary

Actress Nayanthara has joined the cast of popular Telugu actor Nandamuri Balakrishna's 111th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com